மூன்று இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேர் பலி- மது அரக்கனால் விபரீதம்..!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மதுபோதையில் ஓட்டுநர் லாரியை இயக்கியதில், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர்.
ஜலகண்டாபுரத்திலிருந்து தேங்காய் சுமை ஏற்றி தாரமங்கலம் நோக்கி சென்ற லாரி, செலவடை பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையில் சென்ற 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில், உடல்சிதறி பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
Comments