எடைகுறைவு.. ஆற்றல் அதிகம்.. அலுமினியத்தால் தயாரிக்கப்படவுள்ள 100 வந்தே பாரத் ரயில்கள்..!

0 3539

முதன்முறையாக அலுமினியத்தால் உருவாக்கப்படும் 100 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது.

30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்பெட்டி தயாரிப்பு மற்றும் 35 வருட பராமரிப்பு திட்டத்திற்கு, பிரான்சின் Alstom, ஹைதரபாத்தைச் சேர்ந்த Medha Servo Drives நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன.

தற்போது வந்தே பாரத் ரயில்கள், இருக்கை வசதியுடன், Stainless Steel-லால் தயாரிக்கப்படும் நிலையில், முழுக்க படுக்கை வசதியுடன், அலுமினியத்தால் தயாரிக்கப்படும் ரயில்களை, 2024-ம் ஆண்டுக்குள் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சோனிபட்டில் தயாராகும் அலுமினிய வந்தேபாரத் ரயில்கள், எடைகுறைவாகவும், அதிக ஆற்றல் திறன் உடையதாகவும் இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments