கடனுக்கு சிகரெட் தராத கடை ஊழியர் மீது கஞ்சா புள்ளிங்கோஸ் தாக்குதல்...

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மது மற்றும் கஞ்சா போதையில் வந்ததாக கூறப்படும் இளைஞர்கள் கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த கடை ஊழியரை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிக்கல் பகுதியில் உள்ள பேக்கரிக்கு நேற்று இரவு 11 மணி அளவில் வந்த இளைஞர்களில் ஒருவர் கடனுக்கு சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. கடை ஊழியர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். அவரது செல்போனை வாங்கிப் பார்த்த கடை ஊழியர் பணம் வரவில்லை என்று சொன்னதால், ஆத்திரடைந்த அந்த நபர் கடையில் இருந்த தராசை உடைத்ததோடு, ஊழியரையும் தாக்கியுள்ளார்.
கடை ஊழியர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததையொட்டி, கடைக்கு வந்த போலீசார் நான்கு பேரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
Comments