விதிகளை மீறிய பதிவெண் பலகை கொண்ட வாகனங்களுக்கு அபராதம்.. போலீசார் அதிரடி..!

சென்னையில் பதிவெண் பலகை இல்லாத அல்லது விதிகளுக்கு முரணாக பதிவு எண் எழுதப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்து காவல்துறை தொடங்கியுள்ளது.
பதிவெண்கள் குறிப்பிட்ட அளவு, வடிவம் இல்லாதிருத்தல், அவற்றில் தேவையற்ற போட்டோக்கள், வாசகங்கள் ஒட்டியிருத்தல் என விதிகள் மீறப்பட்டிருந்தால், அந்த வாகனங்களுக்கு முதல் முறை அபராதமாக 500 ரூபாய் விதிக்கப்பட்டு, அதற்கான நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. அபராதம் செலுத்துவதுடன், 3 நாட்களில் குறைகளை சரிசெய்து, அதனை புகைப்படம் எடுத்து காவல்துறை எண்ணுக்கு அனுப்ப வேண்டும். குறைகளை சரி செய்யாமல் வாகனங்களை இயக்கினால், அடுத்த முறை 3 மடங்காக, அதாவது 1500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.
காவல் ஆணையர் அலுவலகத்தின் பார்க்கிங் பகுதியிலுள்ள போலீசாரின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
Comments