3-க்கு 2 பெரும்பான்மையில் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.. பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க அதுதான் ஒரே வழி - அமித் ஷா

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-க்கு 2 என்ற பெரும்பான்மையில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க ஒரே வழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாள்தோறும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்ததான செய்திகளைக் கேள்விபடுவதாக தெரிவித்த அமித்ஷா, பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கும் அவரது அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.
Comments