சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

0 908

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து ஜெலன்ஸ்கி இதனை அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த 12 அம்ச திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments