மதுரை முனியாண்டிசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 127 ஆடு, 800 சேவல், 2,500 கிலோ அரிசியில் பிரியாணி திருவிழா

0 2314

மதுரையில் கள்ளிக்குடி அருகே, வடக்கம்பட்டி ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலின் 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 127 ஆடுகள், 800க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு 2 ஆயிரத்து ஐநூறு கிலோ அரிசியில் பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, பக்தர்கள் தேங்காய், பழம், பூ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து முனியாண்டி சுவாமியை வழிபாடு செய்தனர். தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள், உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments