10 மூட்டை வெங்காயம் விற்பனை - விவசாயிக்கு கிடைத்ததோ 2 ரூபாய்க்கு காசோலை..!

0 3199
10 மூட்டை வெங்காயம் விற்பனை - விவசாயிக்கு கிடைத்ததோ 2 ரூபாய்க்கு காசோலை..!

மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூரில் விவசாயி ஒருவர் பத்து மூட்டை வெங்காயம் விற்ற தொகையாக 2 ரூபாய்க்கு காசோலை கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையாக இரண்டு ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெங்காயம் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் வெங்காய மண்டியில் குவிண்டால் 100 ரூபாய்க்கு விலை பேசப்பட்டது.

2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்ட அந்த விவசாயி பத்து மூட்டை வெங்காயத்தைக் கட்டிக் கொண்டு 70 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மண்டிக்கு செல்லவே 400 ரூபாய் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தியுள்ளார்.

பத்து மூட்டை வெங்காயத்தில் ஓரளவு அழுகிப் போன வெங்காயங்களைக் கழித்துவிட்டு கணினி மூலம் கணக்கிடப்பட்டதாக விவசாயியின் மகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments