டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்குதல்..!

0 1214
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்குதல்..!

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் இரண்டாவது நாளாக பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

கடும் அமளிகளுக்கு மத்தியில் மாநகராட்சியின் நிலைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் விரட்டி அடித்ததைக் கண்டித்து அக்கட்சியினர் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments