சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுக்குள் கோழியைப் பிடிக்க சென்று சிக்கிய நபர்.!

0 1342

உத்தரபிரதேசத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட இரும்புக் கூண்டுக்குள் இருந்த கோழியைப் பிடிக்கச் சென்ற ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்டு கதறிய காட்சி நகைப்பை ஏற்படுத்தியது.

புலன்ஷார் பகுதியிலுள்ள கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று அடிக்கடி நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக இரும்புக் கூண்டு அமைத்த வனத்துறையினர், அதற்குள் உயிருள்ள கோழி ஒன்றை வைத்துள்ளனர்.

அந்த கோழிக்கு ஆசைப்பட்டு, நள்ளிரவில் ஒரு நபர் கூண்டுக்குள் புகுந்துள்ளார். உடனடியாக கூண்டு மூடிக்கொண்ட நிலையில், காலையில் அவ்வழியாகச் சென்றவர்களைப் பார்த்து தன்னைக் காப்பாற்றும்படி கதறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments