''அதிமுக என்பது.. எனது தாத்தாவோ, இபிஎஸ் தாத்தாவோ தொடங்கிய கட்சி அல்ல..'' - ஓபிஎஸ்

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும், அக்கட்சியின் தலைமை பதவியை பிடிக்க அதிமுக, தமது தாத்தாவோ, இபிஎஸ் தாத்தாவோ தொடங்கிய கட்சி அல்ல என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், அதிமுக பொதுக்குழு தொடர்பாக மட்டுமே உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், தான் திமுகவின் 'பி' டீம் என சிலர் சொல்வது குறித்து தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்றும் இபிஎஸ் தரப்பினர் தான் திமுகவின் 'ஏ' முதல் 'இசட்' வரை உள்ள அனைத்து டீமும் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
Comments