ஈரோடு கிழக்கு தொகுதியில் பிளாக்கில் சரக்கு விற்பனை படுஜோர்.. விடிய விடிய கல்லா கட்டும் மதுக்கடைகள்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதியில் விடிய விடிய பிளாக்கில் மதுவிற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு பரிசு பொருட்கள் வழங்கி வரும் அதே வேளையில், மதுக்கடைகளும் கல்லா கட்டுகின்றன.
இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இரவு நேரத்தில் எப்போது கேட்டாலும் ஊழியர்கள் கடையை திறந்து பிளாக்கில் மதுவிற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு பாட்டிலுக்கு குறைந்தது 100 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
Comments