மார்ச் 1-ம் தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்..!

0 1129

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மார்ச் 1-ம் தேதி இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 28-ம் தேதியிலிருந்து அரசு முறை பயணமாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு செல்லும் அவர் அதனைத் தொடர்ந்து இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது பலதரப்புவாதத்தை வலுப்படுத்துவது, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, போதைப்பொருள் எதிர்ப்பு, உலகளாவிய சுகாதாரம், மனிதாபிமான உதவி, பேரழிவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments