தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான முத்துக்குமார் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நகை அடகுக்கடை நடத்தி வந்தார்.
புதன்கிழமை மதியம் தனது அடகுக்கடையில் வைத்தே 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் முத்துக்குமார் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வேல்முருகன், ராஜரத்தினம், லங்கேஸ்வரன் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என் 4 -ல் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் சரணடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments