விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்-கே.பி.முனுசாமி

0 1467

அதிமுக சார்பில் விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

ஈரோடு தேர்தல் பணிமனையில் வைத்து, முன்னாள் அமைச்சர்களுடன் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக எனும் பேரியக்கத்தை சட்டப்போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டுள்ளார் என அப்போது அவர் கூறினார்.

தன்னை வளர்த்தெடுத்த தலைமைக் கழகத்தை கைப்பற்ற எண்ணி, ஓபிஎஸ் தரப்பு செய்த அட்டூழியங்களுக்குக் கிடைத்த பரிசு இந்த தீர்ப்பு என நத்தம் விஸ்வநாதன் கூறினார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரவேண்டும் என்பதற்கான அச்சாணிதான் இந்த தீர்ப்பு என எஸ்.பி.வேலுமணியும், துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று சி.வி.சண்முகமும் கூறினர்.

ஓபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் வரவேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments