டிக்டாக்கில் பறந்து டிக்கியில் விழுந்தவர்கள் செய்த விபரீத சேட்டை..! ஆட்டோ ரஞ்சித் கைது

0 2057

இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் டிக்கி ஆப்பில் வீடியோ வெளியிடும் பெண்கள் மற்றும் ஆண்களை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் வீடியோ வெளியிட்டு மிரட்டி வந்த கும்பலின் தலைவன் சிவகங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டான். 2 கூட்டாளிகளையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விரட்டப்பட்ட டிக்டாக்கில் இருந்து இடம் பெயர்ந்து, டிக்கி ஆப்பில் ஒட்டிக் கொண்டு பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து போலீஸில் சிக்கி உள்ள மிடில் ஏஜ் மன்மதன் ஆட்டோ ரஞ்சித் இவர்தான்..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையை சேர்ந்தவர் யூ டியூபர் தயாளபிரபு. இவர் சிவகங்கை காவல் கணகாணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னையும் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டுவதாக ஈரோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் தலைமையிலான கும்பல் மீது புகார் அளித்தார்.

இதில் சென்னை சுகுணா, திருப்பூர் அன்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாரி, தர்மபுரி விமல் ஆகியோர் ஈரோட்டில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இந்த பணம் பறிப்பு வேலைகளை செய்வதாக புகைப்பட ஆதாரங்களையும் அளித்திருந்தார்.

இக்கும்பல் பல பெண்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்ததாகவும் , தொல்லை கொடுத்ததாகவும் , நிம்மதி தேடி டிக்கி ஆப்பில் வீடியோ பதிவிட்ட பலர் , தங்களது உறவினர்கள் மத்தியில் அவமானப்பட்டு மன நிம்மதி இழந்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இவரை போலவே இந்த கும்பலால் பாதிப்படைந்தவர்கள் சென்னை, ஈரோடு, சேலம் , அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் , ஆபாச வீடியோக்களை மார்பிங்கில் வெளியிட்ட ஆட்டோ ரஞ்சித்தை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் இருவரை பிடித்து விசாரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள சென்னை சுகுணாவைத் தேடி வருகின்றனர்.

டிக்கி ஆப்பில் உள்ள தன்னுடைய எதிரிகளின் பெயரை எலுமிச்சம் பழத்தில் எழுதி, அதனை காளி கோவிலில் உள்ள சூலத்தில் குத்தி வைத்து சுகுணா மிரட்டி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக செய்துள்ளார்.

டிக்கிய தட்டுனோமா... வீடியோ போட்டோமா... நாலு லைக்க வாங்குனோமான்னு இல்லாம, வாண்டடா போய் வம்பு இழுத்ததால் ஆட்டோ ரஞ்சித்.. ஆட்டோமேட்டிக்கா கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments