தமிழ்நாடு அரசின் முதன்மை பயிற்சி நிறுவனத்தின் ”நோக்கம் செயலி” அறிமுகம்..!

தமிழ்நாடு அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ”நோக்கம்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும் வகையில், ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான மாதிரி தேர்வுகள் நடத்தி, விடைத்தாள்களை திருத்தி கொடுக்கும் வசதி இந்த செயலியில் உள்ளது.
இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Comments