இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகரித்த மின்சார வாகனங்களின் விற்பனை.!

0 1143

இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 28 விழுக்காடு அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 248 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் அவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பேட்டரியில் இயங்கும் 9 வகையான இருசக்கர வாகனங்கள், 6 வகையான மூன்று சக்கர வாகனங்கள், 5 வகையான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவற்றுக்கான சார்ஜிங் பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments