அன்புஜோதி ஆசிரம விவகாரம் - முதற்கட்ட நடவடிக்கையாக சிபிசிஐடி போலீசார் தவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அருள் பாலகோபாலன் தலைமையிலான 20 பேர் கொண்ட போலீசார் அன்புஜோதி ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்
Comments