டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த மக்னா யானையால் பரபரப்பு..!

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த மக்னா காட்டுயானையை பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர்.
தர்மபுரி, பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் அட்டகாசம் செய்து வந்த மக்னா காட்டுயானையை கடந்த 5ஆம் தேதி பிடித்த வனத்துறை அதிகாரிகள் வரகளியார் வனப்பகுதியில் விட்டனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அங்கிருந்து வெளியேறிய மக்னா யானை சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட கிராமங்களை கடந்து தற்போது மன்னூர் கிராமத்தில் உள்ளது.
Comments