கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதால், ,அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டித்த மாவட்ட ஆட்சியர்..!

0 2091

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால், ,அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டித்து, செயல்பாடுகளை நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தோல் தொழிற்சாலையில் புகாரின்பேரில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக அந்த தொழிற்சாலையை மூடவும், அதில் உள்ள மின் இணைப்பை துண்டிக்கவும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் தொழிற்சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments