சாலையில் டூவீலரில் சென்றபோது மின் ஒயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழிப்பு...!

0 2434

சென்னை, பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது மின் ஒயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

நேதாஜிநகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் அவரது குழந்தைகளை பள்ளியில் விட்டு வீடு திரும்பியபோது மின் ஒயர் அறுந்து விழுந்துள்ளது. சாலையில் சென்ற நாய் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து போராட்டம் நடத்திய முகமது இஸ்மாயிலின் உறவினர்களிடம், தாம்பரம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு உடல் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments