மீட்புப்பணிக்காக துருக்கி சென்ற இந்திய மீட்புக்குழுவினர் தாயகம் திரும்பினர்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு மீட்புப்பணிக்காக சென்ற இந்திய மீட்புக் குழுவினரின் கடைசி குழு தாயகம் திரும்பியது.
151 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 3 குழுக்களாக துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மோப்ப நாய்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இரு குழுக்கள் ஏற்கனவே நாடு திரும்பிய நிலையில், 12 நாட்களுக்குப் பிறகு இறுதிக்குழுவும் இன்று இந்தியா திரும்பியது. தாயகம் திரும்பிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Comments