நிலநடுக்கத்தால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக கட்டட இடிபாடுகளின் மீது கட்டி பறக்கவிடப்பட்டுள்ள பலூன்கள்..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒவ்வொரு குழந்தையின் நினைவாக, இடிபாடுகளின் மீது சிவப்பு வண்ண பலூன்கள் கட்டி பறக்கவிடப்பட்டுள்ளன.
ஹாடே நகர கட்டட இடிபாடுகளில் தென்படும் கம்பிகளின் மீது பலூன்களை கட்டி பறக்கவிட்ட தன்னார்வலர்கள், ஒவ்வொரு பலூன்களை கட்டும்போதும் இதயம் வலிப்பதாகவும், இது, உயிரிழந்த குழந்தைகளுக்கு தாங்கள் கொடுக்கும் கடைசி பரிசு எனவும் வேதனை தெரிவித்தனர்.
Comments