''சூடு பிடித்துள்ள தேர்தல் களம்..'' ஈரோட்டில் அனல் பறக்கும் பரப்புரையில் வேட்பாளர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் ரவி மரியா உள்ளிட்டோர் சம்பத் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அவர்களுக்கு, அதிமுக தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத், அக்ரஹாரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது எம்.ஜி.ஆர் போல வேடமணிந்த அதிமுக தொண்டர்கள் ஓட்டு கேட்டனர்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ மற்றும் ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி ஆகியோர் மணிகூண்டு, கிருஷ்ணா தியேட்டர் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நடனமாடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, கீரைக்கரை வீதியில் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
Comments