சொகுசு காரில் கஞ்சா கடத்திய விஏஒ உள்ளிட்ட 3 பேர் கைது..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், சொகுசு கார், மொபைல் போன்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வல்லத்திராகோட்டை பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது ஒரு கிலோ எழுநூறு கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் சிக்கிய நிலையில், காரில் இருந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவி வர்மா, கணேசன், சூர்யசந்திரபிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
Comments