லிஃப்ட் கொடுப்பதுபோல இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை..!

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருமணமான பெண்ணுக்கு, லிஃப்ட் கொடுப்பது போல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
பெரம்பலூர் செல்வதற்காக ரெட்டிமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் 42 வயது பெண் ஒருவர் பகல் வேலையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெட்டிமாங்குடியை சேர்ந்த 46 வயதான சுரேஷ், லிஃப்ட் கொடுப்பது போல அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள முட்புதருக்கு சென்று அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சுரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Comments