தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மாரடைப்பால் காலமானார்..!

0 1906

முன்னாள் அமைச்சரும் திமுக மாநில வர்த்தக அணி தலைவருமான  உபயதுல்லா மாரடைப்பால் காலமானார்.

தஞ்சை கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்த 83 வயதான உபயதுல்லா, 4 முறை தஞ்சாவூர் தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் 2006 - 2011ம் ஆண்டில் திமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இவர் இன்று காலை தனது பேரனின் திருமணத்துக்காக கிளம்பிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

தஞ்சையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உபயதுல்லா உடலுக்கு அரசியல், கட்சியினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உபயதுல்லா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments