சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 15 பேர் உயிரிழப்பு..!

0 1164

சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் வசிக்கும் பகுதியிலுள்ள 10 மாடி கட்டடம் மீது அதிகாலை ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

கட்டடம் பலத்த சேதமடைந்தது ராணுவ வீரர் ஒருவர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

சிரிய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் Hezbollah அமைப்பினரை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments