மயில்சாமியின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள்..!

0 1879

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர்கள் பாக்கியராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர்கள் பார்த்திபன், ஜெயராம், ராதாரவி, செந்தில், தாமு உள்ளிட்டோரும், அரசியல் பிரமுகர்கள் ஜெயக்குமார், ஜி.கே.வாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மயில்சாமி அண்ணனின் மறைவு பேரிழப்பு என்றும், ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் எனவும் வேதனை தெரிவித்தார்.

நடிகர் மயில்சாமி இளகிய மனம் கொண்டவர், வயிறு பசி யாருக்கும் இருந்துவிட கூடாது என நினைப்பவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே எண்ணமாக கொண்ட நல்ல மனிதன் மயில்சாமி என இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments