மனைவி இறந்த இரண்டே தினங்களில் உயிரிழந்த 108 வயது முதியவர்..!

மயிலாடுதுறையில், 65 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த 85 வயது மனைவி இறந்த இரண்டே தினங்களில் மனைவியின் பிரிவை தாங்காமல் 108 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1915ஆம் ஆண்டு பிறந்த இந்தளூர் பகுதியை சேர்ந்த கண்ணன் செட்டியார், கடந்த புதன்கிழமை அன்று தனது மனைவி பழனியம்மாள் உடல் நலக்குறைவால் இறந்ததால் சரியாக உணவு அருந்தாமல் சோகமாக இருந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
Comments