நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையிலகினர், பொதுமக்கள் அஞ்சலி!

0 4893

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். ஒவ்வொருவரும், அவருடனான, மறக்க முடியாத உறவினை, நட்பினை, கண்ணீருடன், உருக்கமுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நண்பா என்னை இப்படி ஏமாத்திட்டு போயிட்டியே எனக்கூறி கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்கச் செய்தது.

சிவன் அடியராகவே வாழ்ந்தவர் சிவ ராத்திரி அன்றே அவருடைய இழப்பு ஏற்பட்டிருப்பது, மனசுக்கு நிறைய பாரத்த கொடுப்பதாக, நடிகரும், இயக்குநருமான மனோபாலா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்

நடிகர் மயில்சாமி நேற்று இரவு உயிரோடு இருந்த கடைசி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிவராத்திரி விழாவில், டிரம்ஸ் சிவமணி வாசிக்க மகிழ்ச்சியாக தாளம் தட்டிய காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியில், சிவ பாடல்களையும் மயில்சாமி பாடியுள்ளார்.

சிவராத்திரி விழாவில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரங்களில் மயில்சாமி மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டதாக, டிரம்ஸ் சிவமணி உருக்கமுடன் கூறியுள்ளார்....

ஏழை,எளியவர்கள், கஷ்டப்படுகின்ற திரையுலகினருக்கு உதவி புரிவதில் நடிகர் மயில்சாமி தன்னிகரற்று விளங்கியதாக, நடிகர்கள் செந்தில், ரமேஷ் கண்ணா, வையாபுரி, ராதாரவி உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments