பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

0 13646

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

1984ஆம் ஆண்டு தாவணிக் கனவுகள் படத்தில் அறிமுகமானவர் மயில்சாமி.100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

வீரம், உத்தமபுத்திரன், கில்லி, தூள் உள்பட ஏராளமான படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக்குடன் இவர் இணைந்து நடித்த படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமானவை.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். கடந்த ஆண்டு வெளியான உடன்பால் படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments