துருக்கியில் 12 நாட்களுக்குப்பின் இடிபாடுகளில் இருந்து 4 பேர் உயிருடன் மீட்பு..!

0 1689

துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் நிலநடுக்கம் நேரிட்டு, 12 நாட்களுக்குப்பின் இடிபாடுகளுக்கிடையே இருந்து ஒரே குடும்பத்தை 3 பேர் உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கட்டட இடிபாடுகளுக்கிடையே இருந்த அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கியில் மட்டும் 2 லட்சத்து 64 ஆயிரம் குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன. பலர் காணாமல் போயிருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments