ஜார்கண்ட் ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..!

ஜார்கண்ட் ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார்.
பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனை, கடந்த 12-ஆம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக, குடியரசுத்தலைவர் நியமித்தார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்டின் 11-வது ஆளுநராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ்குமார், ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments