வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை, நடப்பு கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டுமென, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை, பாமக நிர்வாகிகளுடன் சந்தித்த அன்புமணி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மட்டுமே முதலமைச்சருடன் பேசியதாகவும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லையெனவும் கூறினார்.
Comments