அமெரிக்காவில் பயங்கரம்.. தனது முன்னாள் மனைவி, வளர்ப்புத்தந்தை உள்பட 6 பேரை சுட்டு கொன்ற கொடூரன் கைது..!

0 2131
அமெரிக்காவில் பயங்கரம்.. தனது முன்னாள் மனைவி, வளர்ப்புத்தந்தை உள்பட 6 பேரை சுட்டு கொன்ற கொடூரன் கைது..!

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் தனது முன்னாள் மனைவி, வளர்ப்புத்தந்தை உள்பட 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அர்கபுட்லா என்ற கிராமத்தில் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்ற 52 வயதுக்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு அருகிலிருந்த தனது முன்னாள் மனைவி வீட்டுக்குச் சென்று அவரையும் சுட்டுக் கொன்றார்.

பின்னர், தனது வீட்டிற்குச் சென்றவர் அங்கிருந்த வருங்கால மனைவியை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு வளர்ப்புத் தந்தையை சுட்டுக் கொன்று விட்டு ஆத்திரம் அடங்காமல் வெளியே வந்தவர் அங்கு காரில் அமர்ந்திருந்தவர், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து 3 துப்பாக்கிகளை மீட்டதாக தெரிவித்த போலீசார், காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments