மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை.!

0 3461

முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர், சாலை மார்க்கமாக மீனாட்சி அம்மன் கோவில் சென்றார்.

கோவிலுக்கு வந்த குடியரசுத்தலைவருக்கு, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, பூரண கும்பமரியாதை வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்றனர்.

சாமி தரிசனம் செய்த குடியரசுத்தலைவர், கோவிலில் இருந்த சிற்பங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி, மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments