சாராய வியாபார பிரச்சனையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு - 5 பேர் கைது..!

0 1508
சாராய வியாபார பிரச்சனையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு - 5 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே, கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகரை கிராமத்தை சேந்த பட்டதாரி இளைஞர் தினேஷ் என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பல் சில தினங்களுக்கு முன் தினேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலடைந்த தினேஷ் தனது உறவினர்களுக்கு போன் செய்து, தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு, பூசப்பாடி கிராமத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் மரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரின் தினேஷின் எதிரிகளாக சந்தேகிக்கப்படும் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வதுரை, செந்தில்குமார், யுவராஜ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த நிலையில், முருகேசன், சேதுவை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments