இன்னும் பத்தே நாட்கள்... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்... தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர்..!

0 1631
இன்னும் பத்தே நாட்கள்... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்... தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து, அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னிர்செல்வம், நாசர் ஆகியோர், நஞ்சப்ப நகர் பள்ளிவாசலில், தொழுகை முடித்து வருபவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் தென்னரசு, கருங்கல்பாளையம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக, பாஜகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, கள்ளுக்கடை மேடு பகுதியில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திறந்த வெளிவாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் வெட்டிக் கொடுத்தும், மருத்துவமனையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

இதே போல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, கட்சியினர் புடை சூழ, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments