தனது குடும்ப பிரச்சினையை தீர்க்க எம்எல்ஏ வர வேண்டுமென உடலில் கத்தியால் கீறிக் கொண்டு மிரட்டல்..!

திருப்பூர் ரயில் நிலைய டிக்கெட் மையம் அருகே கத்தியால் உடலை கீறிக்கொண்டு மிரட்டல் விடுத்த நபரை, குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் வந்த இளைஞர், டிக்கெட் மையம் அருகே நின்றுக் கொண்டு மிரட்டல் விடுத்தார். தனது குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க எம்.எல்.ஏ. வரவேண்டும் என சத்தம் போட்டபடி இருந்தார்.
இதனால் டிக்கெட் விநியோக பணி, 2 மணி நேரம் பாதிக்கப்படவே, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும் வந்து பேச்சுநடத்தினர். பின்னர் கத்தியை தட்டிவிட்டு அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.
விசாரணையில், இளைஞரின் பெயர் கண்ணன் என்பதும், மனைவி மற்றும் மகனுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்து மிரட்டலில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது..
Comments