கடலூர் மத்திய சிறையில் இருந்த பிரபல ரவுடி மாத்திரைகளை சாப்பிட்டு விபரீத முயற்சி……

0 1782

கடலூர் மத்திய  சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

விசாரணைக் கைதியான இவர் மீது 30 க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூர் மத்திய சிறையில்  தனசேகரன் அறையில் இருந்து உதவி ஜெயிலர் மணிகண்டன் செல்போன் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்துள்ளார்.

இதனால் அவரை குடும்பத்தினருடன் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து  கொலை செய்ய தனசேகரன் முயற்சித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் ஆஜரான தனசேகரன்,  இன்று அதிகாலை அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை சாப்பிட்டு சிறைக்குள் மயங்கி விழுந்துள்ளார் .

இதனை தொடர்ந்து சிறை ஊழியர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments