ஒரே நேரத்தில் 100 படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் அப்

0 6639

ஒரே நேரத்தில் நூறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அந்த செயலில் ஒரே சமயத்தில் 30 புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், பயனர்களின் வசதிக்காக கூடுதலாக அனுப்பும் வகையில் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஏற்கனவே படங்கள், வீடியோக்களை 'கேப்ஷன்' எனப்படும் தலைப்புகளுடன் பகிரும் வசதி உள்ள நிலையில், இனி ஆவணங்களையும் அதேபோல் தலைப்புகளுடன் பகிரலாம் என கூறப்படுகிறது.

மேலும், புகைப்படங்களை அவற்றின் அசல் தரத்திலேயே பகிர வாட்ஸ் அப் விரைவில் அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments