திருப்பூரில் கஞ்சா விற்றது தொடர்பாக வழக்கில் 5 சிறுவர்களுக்கு நூதன தண்டனை..!

0 7494

திருப்பூரில் கஞ்சா விற்றது தொடர்பாக வழக்கில் 5 சிறுவர்களை அரசு மருத்துவமனைகளில் 30 நாட்கள் சேவை செய்ய, இளம்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் வாரணாசிபாளையம் பகுதியில் திங்கட்கிழமையன்று கஞ்சா விற்றுவந்த 5 சிறுவர்களை பிடித்த போலீசார், அவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய அம்சவரதன் என்பவனையும் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 5 சிறுவர்களையும் திருப்பூர் இளம்சிறார் நீதிமன்ற குழுமத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

அவர்களில் 2 பேரை, அவினாசி அரசு மருத்துவமனையிலும், 3 பேரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 30 நாட்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments