''இறப்பிலும் இணைபிரியாத தம்பதி..''உயிரிழந்த கணவரை கட்டி அழுதபடி மனைவி உயிரிழப்பு..!

விழுப்புரம் அருகே, உயிரிழந்த கணவரை கட்டி அழுதபடி, மனைவியும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி, உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கட்டி அணைத்தவாறு அவரது மனைவி சரஸ்வதி அழுதுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் கணவரின் உடல் மீதிருந்து சரஸ்வதி எழுந்திருக்காத நிலையில், சந்தேகமடைந்த உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கணவரை பிரியமனமின்றி அதே நாளில் மனைவியும் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments