வங்கிகளிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை கண்டித்து வாடிக்கையாளர்கள் ரகளை..!

லெபனானில், வங்கிகளிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து, வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வங்கி வாசலில் டயர்களை எரித்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
டாலருக்கு நிகரான மதிப்பில், லெபனான் நாணயம் 98 சதவீதம் சரிவை கண்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியிருப்பதால், வங்கிகள் தன்னிச்சையாக செயல்பட்டு, பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது, வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்துள்ளது.
Comments