பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 12ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை, சூனாம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.
நல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று காலை பேருந்து நிலையத்தில் தனியாக நின்றிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், மாணவியிடம் விலாசம் கேட்பது போல் பேச்சுக்கொடுத்து, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், கழுத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட அழுதுகொண்டிருந்த மாணவியிடம், பெற்றோரின் செல்போன் எண்ணைப்பெற்று தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Comments