நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.. அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடும் மோதலாக மாறியது..!

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது தொடர்பாக அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பு மோதலாக உருவானது.
ஊரல் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகர் திறந்து வைத்ததாக கூறப்பபடுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபாலன், நெல் கொள்முதல் நிலையத்தால் கிணறு, குளங்களில் உள்ள தண்ணீர் மாசுபடும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கிருந்த திமுகவினர் பூபாலனுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.
அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்த பின்னர் அங்கு வந்த ரோசணை போலீசார் தகராறு குறித்து விசாரணை நடத்தினர்.
Comments