தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 12 சிறுத்தைகள் கொண்டுவரப்படுகிறது..!

தென்னாப்பிரிக்காவில் இருந்து நாளை மறுநாள் 12 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட இருப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 7 ஆண் என 12 சிறுத்தைகளை இந்தியா கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சிறுத்தைகளை கொண்டுவர இந்திய விமானப்படையின் சி-17 விமானம் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதாகவும், நாளை மறுநாள் குவாலியர் விமானப்படைத்தளத்திற்கு கொண்டுவரப்படும் 12 சிறுத்தைகளும் குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு, பின்னர் நமீபிய சிறுத்தைகளுடன் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments