ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' வீடியோ பதிவிடும் நபர்களுக்கு குற்றப்பின்னணி உள்ளதா? என விசாரணை..!

கோவையில் நீதிமன்ற வளாகத்தின் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' பதிவிடும் நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளைஞர் கோகுல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இரத்தினபுரி, சங்கனூர், கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதே சமயம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிடும் நபர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
அந்த நபர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா அல்லது அவர்கள் மீது ஏதாவது வழக்கு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
Comments